செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று காலை முதல் நாளை காலை 6 மணி வரை 20 செ.மீ மழை பெய்யும் என்று மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரி வாய்க்கால் செல்லும் கிராமத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளதாகவும், நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உபரிநீர் திறப்பால், அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.