சென்னையில் பரபரப்பு.! 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து...மீட்புப்பணிகள் தீவிரம்.!

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து

சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.