சசிகலாவுக்கு தீவிர நிமோனியா காய்ச்சல் – மருத்துவமனை நிர்வாகம்.!

The Victoria Government Hospital in Bangalore has reported that Sasikala has severe pneumonia.Oxygen levels have dropped to 95 today.

சசிகலாவுக்கு கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தீவிர நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை 98-ஆக இருந்த ஆக்சிஜன் அளவு இன்று 95-ஆக குறைந்து இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.

மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருப்பதால், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதனிடையே, ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேனை தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node