அதிர்ச்சி...நீட் தேர்வு முடிவு பயம்...மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை ..!

Shock ... Fear of failing NEET exam ... Student Keerthivasan commits suicide ..!

கோவையை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வு முடிவு பயத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த விவசாயி குப்புசாமி- வளர்மதி ஆகிய தம்பதிக்கு கீர்த்திவாசன் (21), தினேஷ் (17) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் கீர்த்திவாசன் என்ற மாணவர் +2 படிப்பை முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த 3 முறை நீட் தேர்வை எழுதி இருந்தார். ஆனால்,நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில்,நான்காவது முறையாக 2021 ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வு எழுதி முடிவுற்காக காத்திருந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா? என்ற பயத்தில் கீர்த்திவாசன் மனமுடைந்து விஷம் குடித்துள்ளார்.

இந்த தகவலறிந்து வந்த கீர்த்திவாசனின் தாயார் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது,பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து,இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்தும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.