பா.ஜ.க.வில் சேரக்கூடாதா.? அதுவும் கட்சி தானே.! நடிகர் ராதாரவி பேச்சு.!

- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் போன்ற மாவட்டத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
- திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை கேட்டால், மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் அனைவரும் வீட்டில் தான் இருக்க வேண்டும் என நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் போன்ற மாவட்டத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவியிடம், வயதானவர்கள் எல்லாம் வீட்டில் இருக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராதாரவி, ஸ்டாலின், ரஜினி, கமல், விஜயகாந்த் அனைவருமே ஒரே வயது உடையவர்கள் என்பதால், மு.க.ஸ்டாலினையே உதயநிதி சொல்கிறார், அப்போ அனைவரும் வீட்டில் தான் இருக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார்.
மேலும், இரண்டாவது வரிசையில் அமர வைத்துவிடுவோம் என்ற பயத்தாலையே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருக்கலாம் என்றும் ராதாரவி கூறினார். மேலும் நடிகர் ராதாரவியிடம், பா.ஜ.க.வில் சமீபத்தில் சேர்ந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு ஏன் பா.ஜ.க.வில் சேரக்கூடாதா அதுவும் கட்சி தானே என்று பதிலளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025