சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 9 தொகுதிகள் காண வேட்பாளர்களை அறிவித்தது.ஆனால் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. இதற்கு முன்னதாக அந்த தொகுதியில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிந்தது.
unknown nodeபின்னர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது பா.சிதம்பரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார் சுதர்சன நாச்சியப்பன்.அவர் கூறுகையில், சிதம்பரத்தின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் சிவகங்கை தொகுதி மக்கள் கோபமாக உள்ளனர் என்று கூறினார்.
unknown nodeமேலும் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று அவர் செயல்படுகிறார், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெல்லக்கூடாது அதன் பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் பிரதமர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார் பா.சிதம்பரம் என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சுதர்சன நாச்சியப்பன் தகுதியான நபர் தான், அவர் கட்சி தலைமை எடுத்த முடிவின்படி நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.