சென்னை :சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ”தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 14 முதல் நடைபெறும். அக்டோபர் 14ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்.
அக்.14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது. பேரவையில் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 2025 – 2026ஆம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
