குமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அந்த மக்களுக்கு என்ன செய்தார்? மு.க.ஸ்டாலின்

This news gives information about Speaking at the Kumari public rally, Modi said, what did he do to those people? MK Stalin

விருதுநகர் மாவட்டத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காங்கிரசுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விருதுநகர் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  காங்கிரசுடன் இந்திரா காந்தி காலம் முதல் கூட்டணி, எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி ? என்றும்

ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது. மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக் மாட்டார்.

தேர்தல் நெருங்குவதால் தான் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது .விலைவாசி உயரவில்லை என்று முதலமைச்சர் கூறினார், ஆனால் மக்கள் விலைவாசி உயர்வதை பற்றி கிராமசபை கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.

130 கோடி நாட்டு மக்கள் தான் என் குடும்பம் என்று குமரி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அந்த மக்களுக்கு என்ன செய்தார்? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.