Fisher Man: 17 மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட

Tamilnadu fisherman arrested

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தற்பொழுது, எல்லை தாண்டியதாக கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரையும்  செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கைதான 17 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர்களை தனி அறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.