திமுக MP & MLA -களை தொடர்ந்து புறக்கணித்துவரும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்வர் நடத்திய அரசு அலுவல் ஆய்வுக்கூட்டங்களில் திமுக MP & MLA -கள் புறக்கணிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது -ஸ்டாலின்

நேற்று முதல்வர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த மனுவை அளிக்க சென்ற திமுக எம்.பி. செந்தில் குமாருக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தியதால் திமுக எம்.பி. செந்தில்குமார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒண்ட வெளியிட்டுள்ளார். அதில், அரசு விழா மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் திமுக MP & MLA -களை தொடர்ந்து புறக்கணித்துவரும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், முதல்வர் பழனிசாமி ஆய்வுக் கூட்டங்களில் திமுக எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம்,பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கேட்கவில்லை. அதிகரிக்கும் கொரோனா நோய் & கொரோனா மரணங்கள் தடுப்பு குறித்து அரசு செலவில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள். முதல்வராகி மூன்றாண்டுகள் ஆகியும், மக்களாட்சியின் அடிப்படை மற்றும் நிர்வாகத்தின் ஆரம்ப இலக்கணத்தைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்சத் திறன் கூட எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

4 hours ago

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

4 hours ago

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

5 hours ago

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

6 hours ago

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

7 hours ago

CSK vs RR: வெற்றி பெறுமா சிஎஸ்கே.? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு.!

டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…

8 hours ago