Kalanidhi Maran - A Rasa - K Annamalai [File Image]
Election2024 : இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்று பிற்பகலுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று பல்வேறு நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன், சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், மத்திய சென்னை மக்களவை தொகுதி அலுவரிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதி தேர்தல் அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நீலகிரி (தனி) மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…