,

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிகள்.! நாளை முதல் தொடக்கம்…

By

நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற உள்ளது. 

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறந்த மாணவர்களுக்கு முதல்வர் கையால் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதற்கான காலை நிகழ்ச்சி போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நாளை (டிசம்பர் 27) முதல் 30ஆம் தேதி வரையில் இறுதி போட்டியை நடத்தி அதில் சிறந்த கலையரசன், கலையரசி விருதுக்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த விருதுகளை பெரும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரி 12ம் தேதி, மாநில அளவிலான கலைத் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விருது வழங்க உள்ளார்.

 

 

Dinasuvadu Media @2023