சென்னையில் அதிநவீன திரைப்பட நகரம்..! ரூ.80 கோடியில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்....

சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் மாற்றம் ரூ.80 கோடியில் சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்.

சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் மாற்றம் ரூ.80 கோடியில் சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில், 2023 -2024 செய்தி மற்றும் விளம்பரத்துறை வணிகவரி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நான்கு அதிநவீன படப்பிடிப்புத் தளங்கள்:

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு:

ரூ.80 கோடியில் சென்னை வள்ளுவர் கோட்டம் உலகத் தரத்தில் புனரமைக்கப்படும்.

டி.எம். சௌந்தரராஜனுக்கு திருவுருவச் சிலை:

டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது புகழைச் சிறப்பிக்கும் வகையில், மதுரை மாநகரில் ரூ.50 இலட்சத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.

கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு மார்பளவுச் சிலை:

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டத் தியாகி, உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடல் ஆசிரியர் மற்றும் பத்ம பூஷண் பட்டம் பெற்றவருமான நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைக்கு, நாமக்கல் நகரில் அன்னாரின் நினைவு இல்லத்தில் ரூ.20 இலட்சத்தில் மார்பளவுச் சிலை அமைக்கப்படும்.

சின்னச்சாமிக்கு அரங்கம்:

தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டு, இந்தி திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமிக்கு அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியில் அரங்கம் அமைக்கப்படும்.