உரிமம் இல்லா மது விற்பனை... மீறினால் கடும் நடவடிக்கை... டாஸ்மாக் எச்சரிக்கை.!

தமிழகத்தில் மது விற்பனையை அரசு டாஸ்மார்க் நிறுவனம் நடத்தி வருகிறது.  மதுபானங்கள் விற்க உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களில் விற்பனை

Tasmac

தமிழகத்தில் மது விற்பனையை அரசு டாஸ்மார்க் நிறுவனம் நடத்தி வருகிறது.  மதுபானங்கள் விற்க உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலையோர தாபா உணவகங்கள் மற்ற சில உணவகங்களில் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வந்துள்ளன.

இந்த சட்டவிரோத விற்பனை குறித்து டாஸ்மார்க் நிர்வாகம் அறிக்கை வெளியீட்டு உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு அதற்கான உரிமம் விதி எண் 1981 இன் கீழ் வழங்கப்படுகிறது. அப்படி அந்த உரிமம் எதுவும் இல்லாமல் உணவகங்கள், சாலையோர தாபா, சிறுகடைகள் என பல்வேறு இடங்களில் மதுபானம் விற்பது சட்டப்படி குற்றம்.

விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.