வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை தேவை – திருமாவளவன்

viduthalai chiruthaigal katchi leader has been accused of spreading slander in the name of freedom of expression.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் குற்றச்சாட்டு.

வன்முறையை தூண்டும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

வதந்தி பரப்ப சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். எனவே  தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.