பலத்த காற்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

ஜூலை 17 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 17 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜூலை 19-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இதே நிலை நீடிக்கும். ஜூலை 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!