கல்லூரி மாணவி கொலை வழக்கு:சதீஷ் என்பவர் கைது

this news given information about student murder case one person arrested

கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5 ஆம் தேதி)அன்று சொந்த ஊருக்கு செல்வதற்கு கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று சென்றுள்ளார் அந்த மாணவி.

ஆனால்  மாணவி அன்று இரவு ஊருக்கு வரவில்லை.இதனால் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.இதன் பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி என்னும் கிராமத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் காவல்த்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.அங்கு இருந்த சடலம் காணமல் போன தனியார் கல்லூரி மாணவி என்று தெரியவந்தது.மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இதன் பின்னர் கோமங்கலம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மாணவியின் கொலை வழக்கில் இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி மாணவி கொலை வழக்கு:சதீஷ் என்பவர் கைது