மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம்.. அமைச்சர் அறிவிப்பு..!

Transport Minister MR Vijayabaskar has announced that students can use the old free bus passes as colleges are open in Tamil Nadu.

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். புதிய பஸ் பாஸ்கள் வழங்க முடியாத நிலையில் பழைய பஸ் பாஸ்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகளுடன் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் , முகக்கவசம் அணிந்தபடியே 50% மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.