மாணவர்கள் தொடர் போராட்டம் -ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத் துறைக்கு மாற்றம்

Students continue to protest - Raja Muthiah Medical College, transfer to the health department

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புகளும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.