தஞ்சையில் மாணவர்களால் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு போராட்டம் – போலீசார் மாணவர்களிடையே கலவரம்!

தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் மற்றும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் நீர் தேர்வு நடைபெற உள்ளது. நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் சில மாணவர்களும் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவ அமைப்பினர் பல இடங்களில் தற்பொழுது போராடி வருகின்றனர். இன்று காலை தஞ்சாவூரில் மாணவ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் மாணவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது, இதில் சில மாணவர்களின் சட்டை கிழிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025