சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்!

நாமக்கலில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.

SchoolStudents - Rasipuram

நாமக்கலில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி.

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மயக்கம், வாந்தி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 9ம் தேதி சத்து மாத்திரை சாப்பிட்ட ஊட் டியை சேர்ந்த மாணவி பாத்திமா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.