த.வெ.வுக்கு ஆதரவா? மாலை 4-க்கு விசிக அறிவிப்பு !!

விசிக நிலைப்பாடு குறித்து இன்று(மே 09) மாலை 4 மணிக்கு முறைப்படி எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவிக்கவுள்ளார்.

Hero Image

சென்னை : சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் முயற்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகள் ஏற்கெனவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 2 ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், விசிக தரப்பில் இருந்து வரும் முடிவு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.விசிக தலைவர் திருமாவளவன், இன்று மாலை 4 மணிக்கு தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவை அறிவிக்கவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார். “திருமாவளவன் அவர்கள் துணை முதல்வராக மட்டுமல்லாமல், முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் கூறினார்.தவெக தரப்பில், “மக்கள் தீர்ப்பை மதித்து, தமிழ்நாட்டின் நலன் கருதி விசிக ஆதரவளிக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம் எனவும் விசிக எம்பி துரை ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.