ஆளே மாறிட்டார் சார்! அமித்ஷாவுக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக!

உள்துறை செயலாளர் யார் என்று தெரியாமலேயே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அதிகாரிக்கு தவெக கடிதம் எழுதியுள்ளது.

Hero Image

தவெக தலைவர் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாகக் கூறி, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கடிதத்தில் முக்கிய தவறு ஒன்று நிகழ்ந்துள்ளது.

தவெக சார்பில் அமித் ஷா மற்றும் உள்துறை செயலாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், தற்போதைய உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற அஜய் குமார் பல்லாவின் பெயரை எழுதியுள்ளனர். அஜய் குமார் பல்லா தற்போது மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.தற்போது இந்திய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார்.

விஜய் Y பிரிவு பாதுகாப்பு பட்டியலில் உள்ள நிலையில், தமிழகத்தில் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக குற்றம் சாட்டியுள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிரமம் ஏற்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கடிதத்தில் உள்துறை செயலாளராக அஜய் குமார் பல்லாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

தவெக இதுவரை இந்தத் தவறு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய்யின் பாதுகாப்பு விவகாரம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கும் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகத் தவறு, முக்கிய கடிதங்களை அனுப்பும் முன் அடிப்படை விவரங்களை இருமுறை சரிபார்க்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.

ஆளே மாறிட்டார் சார்! அமித்ஷாவுக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக!