இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள் – சுகாதாரத்துறை செயலாளர்

The corona spread to IIT students and staff is a lesson for us. Take this as a lesson and act with awareness.

ஐஐடி மாணவர்கள் பணியாளர்களுக்கு கொரோனா பரவியது நமக்கு பாடம். இதை ஒரு பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள என 104 பேருக்கு கொரோனா   தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரானா பரவி உள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆவார் கூறுகையில், சென்னை ஐஐடியில் இதுவரை 444 பேருக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஐஐடி மாணவர்கள் பணியாளர்களுக்கு கொரோனா பரவியது நமக்கு பாடம். இதை ஒரு பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.