CM dashboard திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்!

The Chief Minister will launch the CM dashboard project tomorrow, which will monitor government affairs directly from his room.

அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் CM dashboard திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டத்தை நாளை தொடங்கப்படுகிறது. அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகையை (CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு 360 என்ற தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கை குறித்த கண்காணிப்பு மற்றும் அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை எடுத்து செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல்பலகை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நாளை முதல் முதலமைச்சர் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

unknown node