தமிழக மீனவர்கள் உயிழப்பு., மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? – அதிமுக எம்.பி. தம்பிதுரை

AIADMK MP Thambidurai has said that the Central Government should condemn the Sri Lankan Navy for killing Tamil Nadu fishermen.

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு, இலங்கையை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இலங்கை கடற்படையால் 245 தமிழக மீனவர்கள் கொள்ளப்பட்டு உள்ளதாக எம்.பி.தம்பிதுரை தகவல் தெரிவித்துள்ளார்.