ஒன்றே கடவுள்.. ஒருவரே தெய்வம்.! ஜாதி, மதங்களை நாம் தான் உருவாக்கினோம்.! தமிழக அமைச்சர் அதிரடி கருத்து.!

ஒன்றே கடவுள். ஒருவரே தெய்வம். நாம் தான் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதங்களை பிரித்தோம். அதே போல, ஜாதிகளை உருவாக்கி அப்படியும் பிரித்துள்ளோம். கடவுள்

ஒன்றே கடவுள். ஒருவரே தெய்வம். நாம் தான் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதங்களை பிரித்தோம். அதே போல, ஜாதிகளை உருவாக்கி அப்படியும் பிரித்துள்ளோம். கடவுள் யாரையும் பிரிக்கவில்லை. – என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் ஒரு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதிரி மேல்நிலை பள்ளி துவக்க விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அமைச்சர், ‘ டாக்டர், இன்ஜினியர் என பல்வேறு துறைகளில் மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாதிரி மேல்நிலை பள்ளி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ என பேசினார்.

மேலும் அவர் கூறுகையில்,’ இவ்வுலகில், ஒன்றே கடவுள். ஒருவரே தெய்வம். நாம் தான் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதங்களை பிரித்தோம். அதே போல, ஜாதிகளை உருவாக்கி அப்படியும் பிரித்துள்ளோம். கடவுள் யாரையும் பிரிக்கவில்லை. உலகில் ஆண், பெண்ணை தவிர வேறு ஜாதி எதுவும் இல்லை.’ என வனத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உயிர் மற்றும் பொருட்சேதங்களை தவிர்க்க நவீன கருவிகளை வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ளது. என்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்தின் தெரிவித்துள்ளார்.