இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!

It was announced that the monthly salary of musicians such as Nathaswaram, Thavil and Talam would be tripled.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மானிய கோரிக்கையின் போது இந்து அறநிலைத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதன்படி ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருக்கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் போன்ற இசைக் கலைஞர்களுக்கு  மாத ஊதியத் தொகையை மும்மடங்கு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாதஸ்வர கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1500-லிருந்து ரூ.4500 ஆகவும், தவில் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.1000 லிருந்து ரு.3000 ஆகவும், மேலும், தாளம் இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.750 லிருந்து ரூ.2250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இசை கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.