கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ள்ளது.
தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது,
நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்று தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு பாதுகாப்பு கருதி அவசர எண்களை அறிவித்துள்ள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு எண்1077எனவும், மாநில கட்டுப்பாட்டு எண்1070எனவும் ,
மேலும் பாதிப்புகளை9445869848என்ற எண்ணிற்கு வாட்ஸாப் மூலமும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிவித்துள்ளார்.