23 மாதங்களுக்கு பின் தமிழ்நாடு – கேரளா போக்குவரத்து துவக்கம்..!

23 மாதங்களுக்கு பின் தமிழ்நாடு – கேரளா போக்குவரத்து துவக்கம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் டிச.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொரோனா காரணமாக 23 மாதங்களாக தமிழ்நாடு-கேரளா இடையேயான போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 10 தமிழக அரசு பேருந்துகள் பாலக்காட்டிற்கும், பாலக்காட்டிலிருந்து கோவைக்கு 10 கேரளா மாநில பேருந்துகளும் இயக்கப்படுகிறது.