கடைகளில் 1 மாதத்திற்குள் தமிழ் பெயர்ப் பலகை – பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை..!

ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ் புதிதாக ஒரு பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளார். அது என்ன பிரச்சாரம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கடைகளின் பெயர்களும், பெயர் பலகைகளிலும் தமிழ் இருக்க வேண்டும் எனவும்,  தமிழும் ஆங்கிலமும் கலந்து இருக்கலாம் ஆனால் தமிழ் இல்லாமல் ஒரு பெயர் பலகை கூட இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், |சென்னையில் ‘தமிழை தேடி’ இயக்கம் சார்பில் ‘தனித்தமிழ் சொற்கள் அறிவோம்’ என்ற பதாகையை திறந்து வைத்தபின் பாமக நிறுவனர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் ராமதாஸ் ” தமிழ்நாட்டில் அனைத்து கடைகளிலும் ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் கருப்பு மை, ஏணி நாங்கள் கொண்டு வருவோம் ” என எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.