பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்: வெளியான அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என

Featured image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை  அறிவித்தது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையானது பொதுத்தேர்வின் ஹால் டிக்கெட் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு..! இறுதி விசாரணை 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது