தமிழ்நாட்டில் ஏன் பாதிப்பு எண்ணிக்கை அதிகம்.? முதல்வர் விளக்கம்.!

தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேரின் பரிசோதனை மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த பாதிப்பு குறித்தும், அதனை தடுக்க அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றினார். அப்போது பல்வேறு தகல்வல்கள்,அறிவிப்புகளை தெரிவித்தார்.
அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை அறிய மொத்தம் 50 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேரின் பரிசோதனை மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. என தமிழகத்தில் சில நாட்களாக அதிகமாகி கொண்டே இருக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து விளக்கம் கொடுத்தார்.