தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் எனவும் தென் மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தமிழக வானிலை குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவலைகளை பகிர்ந்து கொண்டார்.
அதில், நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்துள்ளது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செமீ மழையும், பெரம்பூரில் 12 செமீ மழையும் பெய்துள்ளது. அடுத்த 3 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் குறித்து கூறுகையில், தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 தினங்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி செங்கல்பட்டில் பெய்த மலையானது. இதுவரையில் அங்கு அதிகமாக பெய்த 3வது பெரிய மழையாகும்.