குழந்தைகளின் கண்முன்னே தாய் வெட்டி கொல்லப்பட்ட கோர சம்பவம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் வனிதா. இவரது கணவர் இறந்துவிட்டார். 3 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியின் மகனான பிரகாஷிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கியதாக தெரிகிறது.
அதில் 1.5 லட்சத்தை வனிதா திருப்பிக்கொடுத்த நிலையில், மீதம் 50 ஆயிரம் ரூபாயை வனிதா பிரகாஷிடம் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. அது குறித்து போலீசில் பிரகாஷ், வனிதாமீது புகார் கொடுத்துள்ளார்.
இந்த பண பிரச்சனை தொடர்பாக, பிரகாஷ், அவரது நண்பர் சூர்யா, மற்றும் மஹேஸ்வரி எனும் பெண் ஆகியோர் வனிதா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வனிதா வீட்டில் வனிதா, அவரது குழந்தைகள் மற்றும் வனிதா நண்பர் கனகராஜ் ஆகியோர் இருந்துள்ளனர்.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், பிரகாஷ் மற்றும் சூர்யா இருவரும் பயங்கர ஆயுதங்களால் வனிதா, கனகராஜை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் 3 குழந்தைகள் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து, போலீசார் வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025