#JustNow: இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு!

Default Image

வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு. 

வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன், வசந்தபுரம் சக்திவேல் ஆகியிருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜனவரி மாதம் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதாவது, பிரபல ஜவுளி கடையில் பணியாற்றி வந்த 24 வயது பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி இரவு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். வேலூர் கோட்டை பூங்காவுக்கு சென்றுகொண்டிருந்த போது காதலனை தாக்கி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை, செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வன்கொடுமை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்