தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக திரு.சிவமுத்துகுமார் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார், இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் தேமுதிக நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு,உற்றார், உறவினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node