பத்து வருடம் காய்ந்து போயிருக்கிறார்கள் திமுகவினர் – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென கையில் வேல் பிடித்து சிலர் நாடகமாடுகின்றனர் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கோயிலை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.இதன் பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,தீய சக்திகள் வெற்றிக்கு வழி தேடுகின்றனர். ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென கையில் வேல் பிடித்து சிலர் நாடகமாடுகின்றனர். வேல் பிடித்தாலும் ஆள் பிடித்தாலும் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது.பத்து வருடம் காய்ந்து போயிருக்கிறார்கள் திமுகவினர். தப்பித்தவறி ஆட்சியை கொடுத்தால் காய்ந்த மாடு கம்பக்கொல்லையில் புகுந்த கதையாகிவிடும். வேண்டா வெறுப்பாய் பிள்ளையை பெற்று காண்டா மிருகம் என்று பெயர் வைத்தது போல விழிக்கிறார் ஸ்டாலின்.ஸ்டாலின் நடத்தி கொண்டிருப்பது நாடகம் என்று பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025