தர்மபுரி மாவட்டம் ஆரூரில் மலைத்தாக்கி எனும் கிராமத்தில் திருப்பதி என்பவர்களுக்கு சொந்தமான கோழிப்பன்னை ஒன்று மின்னல் தாக்கி தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 7,500 கோழிகள் பரிதாபமாக எரிந்து உயிரிழந்தது.
மேலும், கோழிப்பன்னையில் தீ விபத்து ஏற்பட்டத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பே கோழிப்பண்னை எரிந்து நாசமானது. 1 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தார்கள்.
அதிகாலை நேரத்தில் இடி தாக்கியதால் கோழிப்பண்ணை நாசமாகி திருப்பதி வளர்த்து வந்த 7,500 கோழிகள் பரிதாபமாக எரிந்து உயிரிழந்தது. மேலும், இந்த மின்னில் தாக்கி தீ பற்றி எரியும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.