தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 13 இடங்களிலும்,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் .வாக்களித்தவர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் மனம் மகிழும் வண்ணம் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.