UPSC தேர்வு எழுதுபவர்களுக்கு 3 மாத பயிற்சி.. 3000 ரூபாய் உதவித்தொகை.! தமிழக அரசு நடவடிக்கை.!

UPSC முதன்மை தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 3 மாத இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

UPSC

UPSC முதன்மை தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 3 மாத இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

UPSC சிவில் சர்வீஸ் தேர்வான குடிமை பணியியல் தேர்வில் முதல் படிநிலை தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு தமிழக அரசு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் 3 மாதங்கள் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று (ஜூன் 15) முதல் ஜூன் 17ம் தேதி வரை இணையத்தில் இந்த இலவச பயிற்சிக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வர்களுக்கு மாதம் தோறும் ரூ3000 ஊக்கத் தொகையாகவும் வழங்கப்பட உள்ளது.