ஜி.டி.நாயுடுவிற்கு பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாக இருப்பவர் செல்லூர் ராஜூ -ஈவிகேஎஸ் இளங்கோவன்

This news gives information about The biggest scientist after GDNayudu is Seloor Raju- Ilangovan

ஜி.டி.நாயுடுவிற்கு பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாக இருப்பவர் செல்லூர் ராஜூ  என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில்  ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில்  சிதம்பரத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வைத்தார் சுதர்சன நாச்சியப்பன்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை.ஜி.டி.நாயுடுவிற்கு பிறகு மிகப்பெரிய விஞ்ஞானியாக இருப்பவர் செல்லூர் ராஜூ .நவீன கால தெனாலிராமன் போல வாழ்ந்து வருகிறார் செல்லூர் ராஜூ என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.