ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
அருணாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் நேற்று நள்ளிரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது.அதன் பிறகு இன்று காலை அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, ஜெயமங்கலத்துக்கு கொன்டு வரப்பட்டது.
அங்கு, அவரது உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி உட்பட காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அரசு மரியாதையுடன் ஜெயமங்கலம் மாயணத்தில் மேஜர் ஜெயந்த் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.