பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர் யோகேஷ் குமார் உடல் மதுரை வந்தடைந்தது.
பஞ்சாப்:பதிண்டா ராணுவ முகாமிற்குள் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில், தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த யோகேஷ் குமார் மற்றும் சேலம் மாவட்டம் பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் ஆகிய 2 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் என தெரிய வந்துள்ளது.
தற்போது, யோகேஷ்குமார் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.