ஜெயலலிதா இருந்த கோட நாட்டில் கொலை கொள்ளை நடைபெற்றது மர்மமாகவே இருந்து வருகின்றது.
கோடநாடு கொலையில் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பத்திரிகையாளர் மேத்யூஸ் ஆவணப்படம் வெளியிட்டார்.
கோடநாடு கொலையில் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய பத்திரிகையாளர் மேத்யூஸ் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை வந்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்கூறுகையில் , சயன் , சயனின் மனைவி மற்றும் குழந்தைகள் பலியான கார் விபத்து குறித்து விசாரிக்க கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருகின்றேன். இந்த வழக்கு விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் . ஒரு புகார் மீது பத்திரிகையாளர் என்ற முறையில் பேசினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.