#Breaking:"நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம்" – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

The Chennai High Court has ordered that the power to take action be vested in the Registrar of Co-operative Societies.

முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க பதிவாளரின் அதிகாரம் செல்லுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பென்ட்  செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில்:

“கூட்டுறவு சங்கங்களில் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.அதன்படி,முறைகேட்டில் ஈடுபடும் தலைவர் துணைத்தலைவரை சஸ்பென்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தந்தது சரியே”,என்று தெரிவித்துள்ளது.