சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

This news gives information about The Chidambaram constituency is filed by Thirumavalavan Nomination-Chidambaram thokuthil

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடம் சிதம்பரம் தொகுதியில்  நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது . அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து வருகின்றனர்.

மேலும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது. அதில் ஒரு தொகுதியான சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடம் சிதம்பரம் தொகுதியில்  நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.