இன்று டெல்லி புறப்படும் முதலமைச்சர் முக ஸ்டாலின், நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து, டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார்.
இந்த நிலையில், இன்று டெல்லி புறப்படும் முதலமைச்சர் முக ஸ்டாலின், நாளை மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். நாளை பிற்பகல் 2.30க்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும், 3.30க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார். நாளை மாலை 4.30க்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் சந்திக்கிறார். ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதல்வர் சேர்ந்து சந்திக்கவுள்ளனர்.
மேலும், 1ம் தேதி மாலை 4.30க்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நீட், மேகதாது, ஜிஎஸ்டி நிலுவை தொகை, நிவாரணம் உள்ளிட்டவைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…