கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும், திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடும்-மு.க.ஸ்டாலின்

This news gives information about The coalition parties will compete in 20 constituencies and DMK-20 constituencies-MK Stalin

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து நாளை மறுநாள் முதல் ஆலோசிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் திமுக – மதிமுக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

unknown node

இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில்,  திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்ற பணிகள் நிறைவு பெற்றுள்ளது.  கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும், திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடும்.

எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து நாளை மறுநாள் முதல் ஆலோசிக்கப்படும்.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.