#BreakingNews :போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த காவல் ஆணையர் ! பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை

பிறந்த நாளன்று போலீசாருக்கு விடுமுறை என்று  சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளன்று போலீசாருக்கு விடுமுறை என்று  சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அண்மையில்  மகேஷ்குமார் அகர்வால் சென்னை பெருநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் போலீஸார் தங்களது  பணியை உற்சாகமாக மேற்கொள்ள  பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து போலீசாருக்கும் அவர்களின் பிறந்த நாளில் தனது கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் பிறந்த நாளில் போலீஸாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று  சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு  பிறப்பித்துள்ளார். “பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மற்ற போலீசார்  வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.